இன்றைய கலைஞர்கள்

ஒளவையார், திருவள்ளுவரிலிருந்து தொடங்கி கல்கி தாண்டி வந்த தமிழ்க் கலாச்சாரம் தொன்மையானது. கலைகள் நிரம்பியது. ஆனால், ஒரு கலாச்சார்ம் பழைமையைப் பேசிக்கொண்டே நீடிக்கமுடியாது. தமிழ்க் கலாச்சாரத்தை அடுத்த கட்டத்துக்குத் தூக்கிக்கொண்டு போகிறவர்கள் மூவர்: மீனா கந்தசாமி, தேன்மொழி சுந்தரராஜன், D’Lo.

மீனா கந்தசாமியைப் பலர் அறிவார்கள். சென்னையில் வாழும் அவர், ஒரு எழுத்தாளரும் ஒரு கவிஞரும் ஆவர். பெண்களின் நிலையைப் பற்றிய கருதுக்களைச் சொல்வது அவருடைய எழுத்து. பழைய விடயங்களை புதுக் கண்ணோட்டத்தில் பார்பவர். அகலிகை கெளதமனைப் பற்றியும் இந்திரனைப் பற்றியும் என்னதான் நினைக்கிறாள்? சீதையைத் தீக்குளிக்கச் சொன்ன ராமனுக்கு திரெளபதி என்ன சொல்லி இருப்பாள்? மீனா கந்தசாமியின் எழுத்து இப்படியான கேள்விகளையும் அதற்கு மேலாகவும் கேட்கிறது.

தேன்மொழி சுந்தரராஜன் ஒரு எழுத்தளர், படகர், திரைப்பட இயக்குனர் ஆவர். அவருடைய கலை சாதி வேறுபாடுகளை மையமாகக் கொண்டது. தமிழ்ச் சமூகத்தில் சாதி வேறுப்பாடுகளைப் பற்றித் திறந்து பேசுதல் குறைவு. அவர் தன்னுடையக் கலையால் குரலில்லாதவர்களுக்க்உ தங்கள் குரலை வெளிப்படுத்தும் தென்பைக் கொடுக்கிறார். அதோடு, தன்னுடையக் கலையால் உயர்சாதி மக்கள் தங்கள் பிறப்புரிமை என்னக் கருதுவது உண்மையில் சாதியம் சார்ந்த முன்னுரிமை என்றும் அப்படி அவர்கள் கருதும் பிறப்புரிமைக்குப் பின்னால் இருக்கும் சாதிப் புறக்கணிப்பைப் பற்றியும் சிந்திக்கத் தூண்டுகிறார்.

D’Lo, லாஸ் ஆஞ்சலஸில் வாழும், ஒரு அமெரிக்கத் தமிழ் நாடகக் கலைஞர் ஆவர். D’Loவின் பின்னனி யாழ்ப்பாணம். தன்னுடைய நாடக வசனங்களை அவரே எழுதுவார். அவர், தான் ஒரு சாதாரண தமிழ்க் குடும்பத்தில் திருநம்பியாக வளர்ந்தது எப்படி இருந்தது என்பதை நகைச்சுவை மூலம் வெளிப்படுத்துக்கிறார். D’Lo உலகத்தின் பல பாகங்களில் தனி மனித நாடகங்கள் நடத்தி இருக்கிறார்.

இம்மூன்று கலைஞர்களால் எங்கள் சமுதாயத்தில் இவ்வாறான விடயங்களைப் பற்றிய கலந்துரையாடல் ஊக்குவிக்கப்படுகின்றது. கலை ஒரு பண்பாட்டின் எதிர் ஒலி. எதிர்கலத்தில் தமிழ் இன்னும் ஓங்கி வளர இப்படியான கலைஞர்கள் தேவை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s